தேசியம்
செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு முகாங்களை அகற்றக் கோரும் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவோம்: காவல்துறை

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான முகாம் அகற்றப்பட வேண்டும் என்ற நீதிபதியின் தடை உத்தரவை அமுல்படுத்துவோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான முகாமை அகற்ற Ontario நீதிபதி Markus Koehnen செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டார்.

புதன்கிழமை (03) மாலை 6 மணிக்குள் கூடாரங்களை அகற்றுமாறு செவ்வாய் பிற்பகல் வெளியிடப்பட்ட தடையில் போராட்டக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறை நடவடிக்கை அவர்களின் விருப்பப்படி அமையும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கு இந்த காலக்கெடு பொருந்தும் என Toronto காவல்துறையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தாமகவே முகாங்களை அகற்றி போராட்டத்தை கைவிட திட்டமிட்டார்களா என்பதை போராட்டக்காரர்கள் தெளிவுபடுத்தவில்லை.

May மாதம் 2ஆம் திகதி முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது

தமது கோரிக்கைகளை பல்கலைக்கழகம் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

Related posts

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு கனடிய குழந்தைகள் நாடு திரும்பினர்

Lankathas Pathmanathan

Quebec வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு படையினரை தேடும் பணி தொடர்கிறது

Lankathas Pathmanathan

தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும்

Lankathas Pathmanathan

Leave a Comment