February 22, 2025
தேசியம்
செய்திகள்

Torontoவில் எட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

Torontoவில் எட்டு tow truck தொடர்பான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் வார விடுமுறையில் பதிவாகின.

இதில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

குறைந்தது எட்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக Toronto காவல்துறையினர் திருடப்பட்ட வாகனம் ஒன்றை தேடி வருகின்றனர்.

சனிக்கிழமை (29) அதிகாலை 2 மணிக்கு Scarboroughவில் உள்ள 41, 42 பிரிவுகளில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஆரம்பித்தது.

இறுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) இரவு 7:45 மணிக்கு நிகழ்ந்தது.

இதில் பல வாகனங்கள் சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவை அனைத்தும் Toronto நகரின் tow truck தொழிலுடன் தொடர்பானவை என கூறப்படுகிறது.

ஒரு சந்தேகத்திற்கிடமான வாகனம் இந்த எட்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களிலும் தொடபுர்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, Toronto நகரில் tow truck தொடர்பான 24 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது இந்த ஆண்டு Toronto நகரம் முழுவதும் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 12 சதவீதத்தை குறிக்கிறது.

Related posts

கனடாவில் சீனாவின் தலையீடு குறித்து CSIS கவனம் செலுத்துகிறது

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இடம்பெயர்ந்த உய்குர் மக்களை கனடா மீள்குடியேற்ற வேண்டும்!

Lankathas Pathmanathan

Leave a Comment