December 12, 2024
தேசியம்
செய்திகள்

P.C. மாகாண சபை குழுவில் இருந்து MPP விலக்கல்

Ontario மாகாண சபை உறுப்பினர் ஒருவர் Progressive Conservative கட்சியின் மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டார்.

மாகாண சபை உறுப்பினர் Goldie Ghamari, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த அறிவித்தலை முதல்வர் Doug Ford வெளியிட்டார்.

இங்கிலாந்தின் தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson உடனான சந்திப்பு புகைப்படத்தை Goldie Ghamari அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இதன் பின்னணியில் Progressive Conservative கட்சியின் மாகாண சபை குழுவில் இருந்து Goldie Ghamari விலக்கப்பட வேண்டும் என கனடிய முஸ்லிம்கள் தேசிய சபை வலியுறுத்தியது.

ஆனாலும் இந்த சந்திப்பின் முன்னர், Tommy Robinson பின்னணி குறித்து தான் அறிந்திருக்கவில்லை என Goldie Ghamari கூறியிருந்தார்.

2018 முதல் Carleton தொகுதியை Progressive Conservative கட்சியின் மாகாண சபை உறுப்பினராக Goldie Ghamari பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார்.

Related posts

BC தேர்தலில் NDP பெரும்பான்மை பெறும் நிலை?

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் துணைத் தலைவருக்கு சிறை தண்டனை!

Lankathas Pathmanathan

ஆறு இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan

Leave a Comment