தேசியம்
செய்திகள்

Toronto-St. Paul இடைத் தேர்தலில் Conservative வெற்றி

Toronto-St. Paul தொகுதியில் Conservative கட்சி வெற்றி பெற்றது.

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (24) நடைபெற்றது.

இம்முறை இந்த தொகுதியின் Liberal கட்சி வேட்பாளராக Leslie Church, Conservative கட்சியின் வேட்பாளராக Don Stewart, NDP வேட்பாளர் Amrit Parhar, பசுமை கட்சி வேட்பாளர் Christian Cullis ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில் Don Stewart, 590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக Liberal கட்சி வெற்றி பெற்று வந்த தொகுதியை  Conservative கட்சி தனதாக்கியுள்ளது.

இந்த தொகுதியில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மொத்தம் 84 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் எட்டு பேர் மட்டுமே ஒரு கட்சியை பிரதிநிதித்துவ படுத்துகின்றனர்.

ஏனையவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக தேர்தலை எதிர் கொண்டனர்.

இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை நான்கு மணியின் பின்னர் வெளியானது

நீண்ட வாக்குச்சீட்டு தேர்தல் முடிவுகள் தாமதத்திற்கு காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.

Conservative கட்சியின் வேட்பாளர் Don Stewart 15,555 வாக்குகளை பெற்றார்.
Liberal கட்சியின் வேட்பாளர் Leslie Church 14,965 வாக்குகளை பெற்றார்.
NDP கட்சியின் வேட்பாளர் Amrit Parhar 4,044 வாக்குகளை பெற்றார்.
பசுமை கட்சியின் வேட்பாளர் Christian Cullis 1,059 வாக்குகளை பெற்றார்.

ஏனைய வேட்பாளர்கள் எவரும் தலா 250 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை.

சுமார் 43 சதவீதம் பேர் இந்த இடைத் தேர்தலில் வாக்களித்தாக உத்தியோகபற்றற்ற தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Carolyn Bennett பதவி விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது.

மூன்று தசாப்தங்களாக இந்த தொகுதியை Liberal கட்சி பிரதிநிதித்துவப்படுத்தியது.

இந்த இடைத்தேர்தல் தோல்வி Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான சவாலாக அமையும் என கருதப்படுகிறது.

இந்த தேர்தல் முடிவு Conservative கட்சிக்கும் தலைவர் Pierre Poilievreருக்கும் பெரும் வெற்றியைப் பிரதிபலிக்கின்றன.

2011 முதல் Torontoவில் ஒரு தொகுதியிலும் Conservative கட்சி வெற்றி பெறவில்லை.

Related posts

கனேடிய மேலவை உறுப்பினர்கள் மீது ரஷ்யா தடை உத்தரவு

ஒலிம்பிக் போட்டியில் கனடா முதலாவது தங்கம் வென்றது

Gaya Raja

Ontario மாகாண தேர்தலில் ஆறு தமிழர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment