தென்மேற்கு Ontario நகரில் நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
Windsor நகருக்கு தெற்கே உள்ள Harrow நகரில் நான்கு பேர் இறந்த நிலையில் Ontario காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.
Ontario மாகாண காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாழக்கிழமை (20) இந்த சடலங்கள் மீட்கப்பட்டன.
பலியானவர்கள் ஒரு ஆண், பெண், இரண்டு குழந்தைகள் என Essex நகர முதல்வர் Sherry Bondy கூறினார்.
இவர்களின் மரணத்திற்கான காரணம் பலியானவர்களின் அடையாளங்கள் ஆகியன இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனால் பொது மக்கள் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.