தேசியம்
செய்திகள்

Ontario Science Centre மூடப்படுகிறது!

Ontario Science Centre கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக மூடப்படுகிறது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் Ontario Science Centreரை பொதுமக்கள் பாவனைக்கு நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Ontario மாகாண அரசாங்கம் வெள்ளிக்கிழமை (21) இந்த முடிவை அறிவித்துள்ளது.

இந்த முடிவு Ontario Science Centre பார்வையாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என மாகாண உட்கட்டமைப்பு அமைச்சர் Kinga Surma தெரிவித்தார்.

அண்மைய பொறியியல் அறிக்கையில் கட்டிடத்தில் அடையாளம் காணப்பட்ட தீவிரமான கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Ontario Science Centre கூரைக்கு ஏற்பட்ட சேதம் பொறியியல் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் காட்டப்பட்டுள்ளது.

1969 இல் திறக்கப்பட்ட Ontario Science Centre எதிர்வரும் குளிர்காலத்தில் கூரையில் செயல் இழக்கும் அபாயம் உள்ளதாக பொறியியல் நிறுவனம் Rimkus Consulting Group தெரிவித்தது.

இந்த மக்கள் சுற்றுலாத் தலத்தில் உள்ள அருங்காட்சியகத்தை வெள்ளி முதல் பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வார இறுதியில் நிகழ திட்டமிடப்பட்ட தனிப்பட்ட நிகழ்வுகள் தொடர அனுமதிக்கப்படுகிறது.

இந்த முடிவு Toronto நகரத்திற்கு ஒரு வேதனையான இழப்பு என நகர முதல்வர் Olivia Chow கூறினார்.

Related posts

2024இல் மேலும் மூன்று வட்டி விகித குறைப்பு சாத்தியம் ?

Lankathas Pathmanathan

அமெரிக்காவிடம் இருந்து கனடா 1.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

Justin Trudeau: அடுத்த பொது தேர்தலை எதிர்கொள்ள தயார்!

Lankathas Pathmanathan

Leave a Comment