தேசியம்
செய்திகள்

வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்பு – நால்வர் கைது

Service Ontario ஊழியர் தொடர்புடைய வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணையில் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக Toronto காவல்துறையினர் அறிவித்தனர்.

இந்த விசாரணையில் கைதானவர்கள்;

Toronto நகரை சேர்ந்த 27 வயதான Shakaib Hashmi,
Oshawa நகரை சேர்ந்த 23 வயதான Aaron Mundy,
Vaughn நகரை சேர்ந்த 22 வயதான Antonio Valle-Garay,
Markham நகரை சேர்ந்த 25 வயதான Howard Lee.

Project Poacher என பெயரிடப்பட்ட இந்த விசாரணையில் கைதானவர்களுக்கு எதிராக மொத்தம் 28 குற்றச் சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

முன்னாள் Service Ontario ஊழியர் ஒருவரைத் தொடர்புபடுத்திய ஒரு மாத காலம் இந்த வாகனத் திருட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 9.5 மில்லியன் டொலர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

தொடர்ச்சியாக 9ஆவது நாளாக 4,000க்கும் குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!

Gaya Raja

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English Version Below)

thesiyam

Leave a Comment