Manitoba மாகாண முன்னாள் முதல்வரின் தொகுதியை Progressive Conservative கட்சி இழந்துள்ளது.
Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது.
Winnipeg நகரின் Tuxedo தொகுதியில் NDP சார்பில் போட்டியிட்ட Carla Compton வெற்றி பெற்றார்.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், Progressive Conservative கட்சியின் நீண்ட கால கோட்டையாக இருந்த தொகுதியை NDP வெற்றி கொண்டது.
600 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியை NDP வெற்றி கொண்டது.
இந்த இடைத் தேர்தலில் 45.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னாள் மாகாண முதல்வர் Heather Stefanson இந்தத் தொகுதியை 2000ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப் படுத்தி வந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மை அரசாங்கத்தைப் பெறத் தவறியதை அடுத்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.