ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை – Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) கனடாவில் பயங்கரவாத குழுவாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக கனடா அறிவித்துள்ளது.
ஈரானிய ஆயுதப் படையின் கிளையான ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை பயங்கரவாத குழுவாகப் பட்டியலிட்டுள்ளதாக கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc புதன்கிழமை (19) தெரிவித்தார்.
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் மனித உரிமைகளை அலட்சியம் செய்ய நடவடிக்கைகளை IRGC முன்னெடுத்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.
கனடாவில் IRGCயின் செயல்பாட்டை எதிர்ப்பதற்கு அனைத்து வளங்களையும் பயன்படுத்த தயாராக உள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இந்தத் தடைக்கான சாத்தியக்கூறு குறித்து கனடிய பிரதமர் Justin Trudeau கடந்த January மாதம் கருத்து தெரிவித்திருந்தார்.
கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்பின் சொத்துக்களை கையாள்வது குற்றமாகும்.
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பைப் பேணினால், தொண்டு நிறுவனங்கள் தங்கள் அந்தஸ்தை இழக்க நேரிடும்.
இந்த குழுக்களுடன் தொடர்புடையவர்கள் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.
இது வங்கிகளின் சொத்துக்களை முடக்கவும் அனுமதிக்கிறது.