December 12, 2024
தேசியம்
செய்திகள்

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத் தேர்தல்

Manitoba மாகாண முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (18) நடைபெறுகிறது.

Winnipeg நகரின் Tuxedo தொகுதி இடைத்தேர்தல் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

Heather Stefanson இந்தத் தொகுதியை 2000ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மை அரசாங்கத்தைப் பெறத் தவறியதை அடுத்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

இம்முறை இடைத் தேர்தலில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முன்கூட்டியே வாக்களிக்கும் எட்டு நாட்களில், தகுதியான வாக்காளர்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.

இந்த தொகுதியில் Lawrence Pinsky Progressive Conservative கட்சியின் சார்பில், NDP சார்பில் Carla Compton, Jamie Pfau, Liberal கட்சியின் சார்பில், பசுமை கட்சியின் தலைவர் Janine Gibson ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related posts

உக்ரேனியர்களுக்கு உதவ போலந்துக்கு படைகளை அனுப்பும் கனடா!

Lankathas Pathmanathan

British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கை: சுற்றுச்சூழல் கனடா

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற இலையுதிர் கால அமர்வு ஆரம்பமானது!

Lankathas Pathmanathan

Leave a Comment