தமிழ் சமூக மைய கட்டுமானத்திற்கான குடும்ப நன்கொடைத் திட்டத்தின் ஆரம்பமாகியுள்ளது.
கனடாவில் தமிழ் சமூக மையக் கட்டுமானத்தில் விழுதுகள் நிதி திரட்டும் விபரங்கள் சனிக்கிழமை (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியாகின.
விழுதுகளாக அடையாளப்படுத்தப்படும் நிறுவுனர் குடும்பங்களிடம் இருந்து முதல் கட்ட நன்கொடைகளை பெற்றுக் கொள்ள தமிழ் சமூக மையம் திட்டமிட்டுள்ளது.
இதில் இணையும் குடும்பங்கள் ஒவ்வொன்றும் தமிழ் சமூக மையத்தை உருவாக்குவதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 டொலரை வழங்க கோரப்பட்டுள்ளன.
இந்த நன்கொடையளிப்பின் மூலமாக 2,500 குடும்பங்களை இணைத்து அதன் மூலம் 25,000,000 டொலரை பெற்றுக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி பங்களிப்பின் மூலம் தமிழ் சமூக மையத்தின் அரங்க நிர்மாண பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ் சமூக மைய இயக்குநர்கள் குழு அறிவித்தது.