தேசியம்
செய்திகள்

இராணுவ கப்பலை திட்டமிட்டு கியூபாவிற்கு அனுப்பிய கனடா?

கனடிய இராணுவ கப்பலை கியூபாவிற்கு அனுப்பிய நகர்வு திட்டமிடப்பட்டது என தேசிய பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கியூபாவிற்கு கனடிய இராணுவ கப்பலை அனுப்பிய முடிவை தேசிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair அலுவலகம் நியாயப்படுத்துகிறது.

கியூபா கடற்பரப்பை ரஷ்ய போர் கப்பல்கள் கடந்த புதன்கிழமை (12) சென்றடைந்தன.

இந்தக் கப்பல்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக கனடிய ஆயுதப்படைகள் கப்பல்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நகர்வை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆனாலும் இந்த பிராந்தியத்தில் கனடாவின் இருப்பை அதிகரிக்க கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை இது என கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair அலுவலகம் தெரிவிக்கிறது

Havana துறைமுகத்திற்கான பயணம் “கவனமாகவும் முழுமையாகவும் திட்டமிடப்பட்டது” என தேசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கனடிய கடற்படை,  கனடிய கூட்டு நடவடிக்கை கட்டளைத்தளம் ஆகியவற்றின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் Bill Blair இதை அங்கீகரித்தார் என அவர் தெரிவித்தார். .

Related posts

Toronto பெரும்பாகத்தில் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும்!

Gaya Raja

2024 Paris Olympics: ஒரே போட்டியில் இரண்டு கனடியர்கள் பதக்கம் வெற்றி

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan

Leave a Comment