கனடிய முதற்குடியினர் கலாச்சார கலைப் பொருட்களை மீண்டும் வழங்க வேண்டும் என
பிரதமர் Justin Trudeau, பாப்பரசர் Francisசிடம் வலியுறுத்தினார்.
பிரதமர் Justin Trudeau, பாப்பரசர் Francis ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இத்தாலியில் நடைபெறும் G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் இவர்கள் இருவரும் சந்தித்தனர்.
உச்சி மாநாட்டின் இரண்டாவது தினமான வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான அமர்வுக்கு பாப்பரசர் தலைமை தாங்கினார்.
இந்த அமர்வின் பின்னர் பாப்பரசர், கனடிய பிரதமரை சந்தித்தார்.
கனடாவின் முதற்குடியிருடனான நல்லிணக்க பணியை முன்னெடுக்கும் பாப்பரசருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
முதற்குடியினருக்கான கலாச்சார கலைப்பொருட்களை வத்திக்கான் மீண்டும் வழங்க வேண்டிய அவசியத்தை Justin Trudeau இந்த சந்திப்பில் வலியுறுத்தினார்.