December 12, 2024
தேசியம்
செய்திகள்

84 வேட்பாளர்கள் போட்டியிடும் இடைத் தேர்தல்!

84 வேட்பாளர்கள் போட்டியிடும் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமானது.

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத்தேர்தல் June 24ஆம் திகதி நடைபெறுகிறது.

ஆனாலும் முன்கூட்டிய வாக்களிப்பு வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமானது.

இந்த தொகுதியில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Carolyn Bennett பதவி விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

மூன்று தசாப்தங்களாக இந்த தொகுதியை Liberal கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இம்முறை Leslie Church, இந்த தொகுதியின் Liberal கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

Conservative கட்சியின் வேட்பாளராக Don Stewart அறிவிக்கப்பட்டுள்ளார்.

NDP வேட்பாளர் Amrit Parhar, பசுமை கட்சி வேட்பாளர் Christian Cullis ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வெள்ளிக்கிழமை (14) காலை 9 மணிக்கு ஆரம்பமான முன்கூட்டிய வாக்களிப்பு திங்கட்கிழமை இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.

Related posts

மத்திய அரசின் பல் நலத் திட்டத்திற்கான இரண்டாவது விண்ணப்பக் காலம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Quebecகில் புதிய இடைக்கால பொது சுகாதார இயக்குநர் நியமனம்

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் உரை

Lankathas Pathmanathan

Leave a Comment