தேசியம்
செய்திகள்

விமான நிலைய தங்கக் கொள்ளை சந்தேக நபர் விரைவில் சரணடைவார்?

Toronto Pearson விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் விரைவில் காவல்துறையினரிடம் சரணடையவுள்ளார்.

முன்னாள் Air Canada ஊழியர் Simran Preet Panesar பல மில்லியன் டொலர் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வருகிறார்

Brampton நகரை சேர்ந்த 31 வயதான இவருக்கான பிடியாணை நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், Simran Preet Panesar காவல்துறையினரிடம் சரணடைய தயாராகவுள்ளதாக அவரது வழக்கறிஞர் Greg Lafontaine கூறினார்.

அவர் தற்போது வெளிநாடு ஒன்றில் உள்ளதாக கூறும் வழக்கறிஞர் அடுத்த சில வாரங்களில் அவர் தானாக முன்வந்து கனடா திரும்ப திட்டமிட்டார் என தெரிவித்தார்

பாதுகாப்புக் காரணங்களுக்காக Simran Preet Panesar எந்த நாட்டில் தற்போது உள்ளார் என்ற தகவலை வழக்கறிஞர் வெளியிடவில்லை.

அவர் தனது மனைவியுடன் இந்தியாவில் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை காவல்துறை விசாரித்து வருகிறது.

கடந்த ஆண்டு Toronto விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒன்பது சந்தேக நபர்கள் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டனர்.

22.5 மில்லியன் டொலர் தங்கக் கொள்ளை கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஏற்கனவே கைதாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள்;

Brampton நகரை சேர்ந்த 36 வயதான Archit Grover,
Georgetown நகரை சேர்ந்த 43 வயதான Ammad Chaudhary,
Oakville நகரை சேர்ந்த 40 வயதான Amit Jalota,
Brampton நகரை சேர்ந்த 35 வயதான பிரசாத் பரமலிங்கம்,
Toronto நகரை சேர்ந்த 37 வயதான Ali Raza,
Brampton நகரை சேர்ந்த 54 வயதான Parmpal Sidhu.

பின்வரும் நபர்களுக்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது;

Brampton நகரை சேர்ந்த 31 வயதான Simran Preet Panesar,
Mississauga நகரை சேர்ந்த 42 வயதான Arsalan Chaudhary.

தவிரவும் Brampton நகரை சேர்ந்த  25 வயதான Durante King-Mclean என்பவரின் கைதுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இவர் தற்போது அமெரிக்காவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

April 17, 2023 அன்று Air Canada வளாகத்தில் இருந்து சுமார் 20 மில்லியன் டொலர் மதிப்புள்ள 6,600 தூய தங்கக் கட்டிகள், சுமார் 2.5 மில்லியன் டொலர் மதிப்பிலான பல்வேறு நாடுகளின் பணம் திருடப்பட்டது.

சூரிச்சில் இருந்து விமானத்தில் வந்த இந்த தங்கம், பணம் திருட்டு குறித்த இரகசிய, கூட்டு விசாரணை “Project 24K” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என கருதப்படுகிறது.

Related posts

Moderna 1.3 மில்லியன் தடுப்பூசிகளை அடுத்த மாதம் கனடாவுக்கு அனுப்பும்

Lankathas Pathmanathan

Ottawa நகர சபையில் இஸ்ரேலிய தேசிய கொடி

Lankathas Pathmanathan

தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்கள் உதவி கோரும் காவல்துறை

Lankathas Pathmanathan

Leave a Comment