பிரதமர் Justin Trudeau, பாப்பரசர் Francis ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது.
இத்தாலியில் நடைபெறும் G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
உச்சி மாநாட்டின் இரண்டாவது தினமான வெள்ளிக்கிழமை (14) நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான அமர்வுக்கு பாப்பரசர் தலைமை தாங்கினார்.
இந்த அமர்வின் பின்னர் பாப்பரசர், கனடிய பிரதமரை சந்திக்கவுள்ளார்.
வெள்ளி காலை ஐரோப்பிய ஆணைய தலைவர் Ursula von der Leyenனை Justin Trudeau சந்தித்தார்.