Ontario, Quebec மாகாணங்களில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Quebec மாகாணத்தின் தென்மேற்கு, மத்திய பகுதிகளில் வியாழக்கிழமை (13) கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதனால் Ontario மாகாணத்தின் Ottawa, Pembroke, North Bay நகரங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.