கடந்த வருடம் பதவி விலகுவது குறித்து எண்ணியதாக Justin Trudeau கூறினார்.
திருமண உறவின் பிரிவின் போது இந்த எண்ணத்தில் இருந்ததாக பிரதமர் தெரிவித்தார்.
வலையொளி – podcast – நிகழ்ச்சியில் இந்த தகவலை Justin Trudeau வெளியிட்டார்
உளவியலாளர் Adam Grant நடத்தும் ReThinking என்ற வலையொளி நிகழ்ச்சியில் Justin Trudeau கலந்து கொண்டிருந்தார்.
கனடியர்களின் விமர்சனங்களை அவர் எவ்வாறு எதிர் கொள்கிறார் என Adam Grant பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது தனது அண்மைய செல்வாக்கற்ற தன்மையை Justin Trudeau ஒப்புக் கொண்டார்.
ஆளும் Liberal கட்சி மக்கள் கருத்து கணிப்பில் எதிர்க்கட்சியான Conservative கட்சியை விட பின்தங்கி உள்ளது.
Justin Trudeauவின் தனிப்பட்ட ஒப்புதல் மதிப்பீடும் சரிந்து வருகிறது.
April மாதம் வெளியான கருத்துக் கணிப்பில் 28 சதவீத கனடியர்கள் மட்டுமே Justin Trudeauவை ஆதரித்துள்ளனர்.
அதேவேளை 66 சதவீதம் பேர் அவரை பிரதமராக ஏற்கவில்லை.
பிரதமரும் அவரது மனைவி Sophie Grégoire Trudeauவும் கடந்த August மாதம் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து செல்ல இணங்கியுள்ளதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.