February 22, 2025
தேசியம்
செய்திகள்

Toronto-St. Paul தொகுதியில் இடைத் தேர்தல்

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத்தேர்தல் June 24ஆம் திகதி நடைபெறுகிறது.

நீண்டகாலமாக Liberal கட்சி இந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மூன்று தசாப்தங்களாக இந்த தொகுதியை Liberal கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Carolyn Bennett பதவி விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

1997ஆம் ஆண்டு இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

இம்முறை Leslie Church, இந்த தொகுதியின் Liberal கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்

Conservative கட்சியின் வேட்பாளராக Don Stewart அறிவிக்கப்பட்டுள்ளார்

NDP வேட்பாளர் Amrit Parhar, பசுமை கட்சி வேட்பாளர் Christian Cullis ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்

பிரதமர் Justin Trudeau, துணை பிரதமர் Chrystia Freeland, Conservative தலைவர் Pierre Poilievre உள்ளிட்டவர்கள் இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

அமெரிக்காவின் வரிவிதிப்பை தவிர்க்க கனடாவுக்கு உத்தரவாதம் எதுவும் கிடைக்கவில்லை?

Lankathas Pathmanathan

மருத்துவ, மத காரணங்களுக்காக தடுப்பூசி போடாதவர்களுக்கு கடவுச்சீட்டு திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட மாட்டாது!

Gaya Raja

Jasper காட்டுத்தீ பகுதியை பிரதமர் நேரடியாக பார்வை

Lankathas Pathmanathan

Leave a Comment