தேசியம்
செய்திகள்

மூன்று மாகாணங்களில் கொடிய நுண்ணுயிர் தொற்று!

கொடிய நுண்ணுயிர் தொற்று – bacterial disease – மூன்று மாகாணங்களில் பதிவாகியுள்ளன.

மூன்று மாகாணங்களில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் அரிதான நுண்ணுயிர் தொற்று குறித்து  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Ontario, Manitoba, Quebec மாகாணங்களில் இந்த நுண்ணுயிர் தொற்று அதிகரித்து வருகின்றன.

இந்த நுண்ணுயிர் தொற்று மூளைக்காய்ச்சல், மரணத்திற்கு வழிவகுக்கும் என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

ஒரு தினத்திற்குள் இந்த தொற்றின் தாக்கம் உடல் நிலையை மோசமடையச் செய்யும் என கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டு Torontoவில் 13 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2002க்குப் பின்னர் எந்த வருடத்தில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும்.

அண்மையில் Torontoவில் இந்த தொற்றின் தாக்கத்தால் ஒரு பெரியவர், குழந்தை உயிரிழந்தனர்

இந்த தொற்றின் 10 சதவீதமானவை ஆபத்தானவை என Health Canada தெரிவித்தது.

இதில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் 10 முதல் 20 சதவீதம் பேர் வரை வாழ்க்கையை மாற்றும் விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.

Related posts

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

OPP அதிகாரியின் இறுதிக் கிரியைகள்

Lankathas Pathmanathan

ரஷ்யாவுக்காகப் போராடும் கனடியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment