Calgary நகரம் கட்டாய நீர் பாவனை எச்சரிக்கையின் கீழ் உள்ளது.
நகரின் அனைத்து குடியிருப்பாளர்கள், வணிகங்கள் தங்கள் நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை (06) காலை இந்த அறிவுறுத்தல் அவசர அறிவிப்பாக வெளியானது.
புதன்கிழமை (05) நகரில் நிகழ்ந்த ஒரு பெரிய நீர் உடைப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளியானது.
நகரின் அனைத்து குடியிருப்பாளர்களும் தண்ணீரை சேமிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தற்காலிகமானது எனவும் இதனை சரி செய்ய தேவையான பணி முன்னெடுக்கப்படுகிறது என நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சிக்கலைத் தீர்க்க நகரம் அதன் அனைத்து வளங்களையும் அர்ப்பணித்துள்ளது என நகர முதல்வர் Jyoti Gondek கூறினார்.