தேசியம்
செய்திகள்

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Ontario முதல்வர் Doug Ford அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை அறிவித்தார்.

வியாழக்கிழமை (06) அறிவிக்கப்பட்ட இந்த அமைச்சரவை மாற்றத்தில் தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்திற்கு புதிய துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த அறிவித்தலில் மொத்தம் 35 அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களில் 16 பேர் வேறு அமைச்சுப்பதவிக்கு மாற்றப்பட்டனர்  அல்லது புதிதாக அமைச்சு பதவியில் நியமிக்கப்பட்டனர்.

சட்டமன்றம் நீட்டிக்கப்பட்ட கோடை விடுமுறைக்காக கலந்த போது அறிவிக்கப்பட்ட இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் முன் கூட்டிய தேர்தல் குறித்த ஊகங்களை தூண்டியுள்ளது.

சுகாதார அமைச்சர் – Health Minister – Sylvia Jones, நிதி அமைச்சர் –  Finance Minister – Peter Bethlenfalvy, மாநகர விவகாரங்கள், வீட்டு வசதித்துறை அமைச்சர் – Municipal Affairs and Housing Minister – Paul Calandra ஆகிய அமைச்சர்கள் தொடர்ந்தும் தமது அமைச்சுப் பதவிகளில் உள்ளனர்.

முன்னாள் கல்வி அமைச்சர் – Education Minister – Stephen Lecce எரிசக்தி, மின்மயமாக்கல் – Minister of Energy and Electrification – அமைச்சராகிறார்.

இந்த அமைச்சு மாற்றம் ஒரு பதவி உயர்வாக நோக்கப்படுகிறது.

முன்னாள் எரிசக்தி, மின்மயமாக்கல் அமைச்சர் Todd Smith, புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சர் – Housing Minister – Steve Clark அரசாங்கத்தின் மாகாண சபை அமர்வுகளில் தலைவராக – government house leader – அறிமுகப்படுத்தப்பட்டார்.

Greenbelt நில இடமாற்று ஊழலின் மத்தியில் Steve Clark, கடந்த September மாதம் தனது அமைச்சரவை பதவியில் இருந்து விலகியிருந்தார்.

மாநகர விவகாரங்கள், வீட்டுவசதித்துறை – Ministry of Municipal Affairs and Housing – அமைச்சகத்தின் ஒரு பகுதியாக, வீட்டு வசதித்துறை – Associate Minister of Housing – இணை அமைச்சராக தமிழர் விஜய் தணிகாசலம் பதவியேற்றார்.

புதிய அமைச்சரவை பதவிகளின் முழு பட்டியல்:

  • Premier Doug Ford remains Minister of Intergovernmental Affairs
  • Sylvia Jones remains Deputy Premier and Minister of Health
  • Peter Bethlenfalvy remains Minister of Finance
  • Paul Calandra remains Minister of Municipal Affairs and Housing
  • Raymond Cho remains Minister of Seniors and Accessibility
  • Stan Cho becomes Minister of Tourism, Culture and Gaming, with responsibility for OLG
  • Doug Downey remains Attorney General
  • Jill Dunlop remains Minister of Colleges and Universities
  • Vic Fedeli remains Minister of Economic Development, Job Creation and Trade
  • Rob Flack becomes Minister of Farming, Agriculture and Agribusiness
  • Michael Ford remains Minister of Citizenship and Multiculturalism
  • Mike Harris becomes Minister of Red Tape Reduction
  • Michael Kerzner remains Solicitor General
  • Andrea Khanjin remains Minister of Environment, Conservation and Parks
  • Natalia Kusendova-Bashta becomes Minister of Long-Term Care
  • Stephen Lecce becomes Minister of Energy and Electrification
  • Neil Lumsden becomes Minister of Sport
  • Todd McCarthy becomes Minister of Public and Business Service Delivery and Procurement, with responsibility for Supply Ontario
  • Caroline Mulroney remains President of the Treasury Board and Minister of Francophone Affairs
  • Michael Parsa remains Minister of Children, Community and Social Services
  • David Piccini remains Minister of Labour, Immigration, Training and Skills Development
  • George Pirie remains Minister of Mines
  • Greg Rickford becomes Minister of Indigenous Affairs and First Nations Economic Reconciliation and remains Minister of Northern Development
  • Prabmeet Sarkaria remains Minister of Transportation
  • Todd Smith becomes Minister of Education
  • Graydon Smith becomes Minister of Natural Resources
  • Kinga Surma remains Minister of Infrastructure
  • Lisa Thompson becomes Minister of Rural Affairs
  • Stephen Crawford becomes Associate Minister of Mines as part of the Ministry of Mines
  • Trevor Jones becomes Associate Minister of Emergency Preparedness and Response as part of Treasury Board Secretariat
  • Sam Oosterhoff becomes Associate Minister of Energy-Intensive Industries as part of the Ministry of Energy and Electrification
  • Nolan Quinn becomes Associate Minister of Forestry as part of the Ministry of Natural Resources
  • Nina Tangri remains Associate Minister of Small Business as part of the Ministry of Economic Development, Job Creation and Trade
  • Vijay Thanigasalam becomes Associate Minister of Housing as part of the Ministry of Municipal Affairs and Housing
  • Michael Tibollo remains Associate Minister of Mental Health and Addictions as part of the Ministry of Health
  • Charmaine Williams remains Associate Minister of Women’s Social and Economic Opportunity as part of the Ministry of Children, Community and Social Services.

சட்டமன்ற உறுப்பினர்கள் October 21ஆம் திகதி மீண்டும் அமர்வுகளில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

Related posts

LCBO வேலை நிறுத்தம் தொடர்கிறது?

Lankathas Pathmanathan

பொதுச் சேவை கூட்டணி மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு

Lankathas Pathmanathan

கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்து சாட்சியமளித்த பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment