December 12, 2024
தேசியம்
செய்திகள்

நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் குறைகிறது

நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக கனடிய மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை குறைத்தது.

மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது.

புதன்கிழமை (05) மத்திய வங்கி இந்த முடிவை அறிவித்தது.

அடிப்படை பணவீக்கம் ஒரு நிலையான அளவில் தளர்த்தப்படுகிறது என்பதற்கு மத்திய வங்கி இப்போது போதுமான ஆதாரங்களைக் காண்கிறது என மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem கூறினார்.

இந்த அறிவிப்பு வட்டி விகிதத்தை 4.75 சதவீதமாக்கிறது.

கடந்த ஆண்டு July மாதத்தில் இருந்து வட்டி விகிதம் 5 சதவீதமாக உள்ளது

மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை March 2022 இல் அதிகரிக்க ஆரம்பித்தது

எதிர்பார்த்ததை விட அதிகரித்த பணவீக்கத்தைத் தொடர்ந்து, இந்த அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது

அடுத்த வட்டிவிகித அறிவிப்பு July 24.ஆம் திகதி தி திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவிடம் தடுப்பூசி உதவிகளை கோரியுள்ள கனடா : வெள்ளை மாளிகை தகவல்

Gaya Raja

ஸ்ரீலங்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு: Conservative  தலைவர் உறுதி

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாணத்தில் புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment