கனடிய மத்திய வங்கி அதன் புதிய வட்டி விகித முடிவை புதன்கிழமை (05) அறிவிக்கவுள்ளது.
மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க ஆரம்பிக்கலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த முடிவு வெளியாகவுள்ளது.
நிதிச் சந்தைகள் மத்திய வங்கி அதன் முக்கிய கடன் விகிதத்தை கால் சதவிகிதம் குறைக்கும் என எதிர்பார்க்கிறது.
வட்டி விகிதக் குறைப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem கூறினார்.
ஆனாலும் இந்த முடிவு பொருளாதார தரவுகளால் வழி நடத்தப்படும் என அவர் எச்சரித்தார்.
April மாதத்திற்கான வருடாந்த பணவீக்கம் 2.7 சதவீதமாக இருந்தது.
March மாதத்தில் பணவீக்கம் 2.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.