December 12, 2024
தேசியம்
செய்திகள்

ரஷ்யாவுடனான தொடர்புகள் “மட்டுப்படுத்தப் பட்டவை’: ரஷ்யாவுக்கான கனடிய தூதர்

ரஷ்யாவுடனான கனடாவின் தொடர்புகள் ‘மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை’ என ரஷ்யாவுக்கான கனடிய தூதர் தெரிவித்தார்.

ஆனாலும் இரு நாட்டு உறவுகளும் ‘நட்பற்றவை அல்ல’ என கனடிய தூதர் Dr. Sarah Taylor கூறினார்.

கடந்த November மாதம் பதவியேற்ற பின்னர் அவர் தனது முதலாவது தொலைக்காட்சி நேர்காணலை வழங்கினார்.

ரஷ்யாவின் மனித உரிமை மீறல்கள் கடுமையான கவலை கொள்ள வைப்பவை என கனடிய தூதர் அந்த நேர்காணலில் தெரிவித்தார்.

உக்ரைன் யுத்தம் கனடா – ரஷ்யா உறவுகளில் மாற்றத்திற்கு ஒரு முதன்மை தடையாக உள்ளது எனவும் Dr. Sarah Taylor கூறினார்.

இராஜதந்திர உறவுகள் கனடிய நலன்களை முன்னேற்றுவதற்கு நாங்கள் பயன்படுத்தும் ஒரு கருவி எனவும் ரஷ்யாவுக்கான கனடிய தூதர் தெரிவித்தார்.

உக்ரைனில் ரஷ்யாவினால் ஆரம்பிக்கப்பட்ட சட்டவிரோத, நியாயமற்ற போருக்கு கனடாவின் வலுவான எதிர்ப்பை அவர் முன்வைத்தார்.

February 2022 இல் ஆரம்பமான ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பை கனடா தொடர்ந்து கண்டித்து வருகிறது

கடந்த தசாப்தத்தில், கனடா 700 நிறுவனங்கள், 1,500 க்கும் மேற்பட்ட ரஷ்ய நபர்களுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.

உக்ரைன் யத்ததை தவிர, பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள், நல்லாட்சி ஆகியவற்றின் மீதான ரஷ்யாவின் ஒடுக்குமுறை கனடிய அரசாங்கத்தை பொறுத்தவரை ஏற்புடையவை அல்ல என கனடிய தூதர் Dr. Sarah Taylor தெரிவித்தார்.

Related posts

Ontario மாகாண பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்!

Lankathas Pathmanathan

ஐந்து மில்லியன் கனேடியர்கள் இதுவரை COVID தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

பெண் வெறுப்பு குழுக்களைக் குறிவைக்கும் Conservative தலைவருக்கு கண்டனம்!

Lankathas Pathmanathan

Leave a Comment