Downtown Toronto விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
சனிக்கிழமை (01) காலை வாகன விபத்தில் TTC streetcar ஒன்று தடம் புரண்டது.
இதில் மூவர் காயமடைந்தனர்.
இவர்களில் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இதில் streetcar பயணிகள் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் கடுமையான காயங்களுடன், மற்றவர் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மற்றைய வாகனத்தின் சாரதியும் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.