புதிய COVID துணை வகைகள் கனடாவில் ஆதிக்கம் செலுத்தும் விகாரங்களாகின்றன.
COVID தொற்றின் பரவல் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி நான்கு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் COVID துணை வகைகள் இரண்டு கனடாவில் ஆதிக்கம் செலுத்தும் விகாரங்களாக மாறியுள்ளன.
KP.2, KP.3 என இந்தப் புதிய துணை வகைகள் அறியப்படுகின்றன.
இது COVID தொற்றில் இருந்து உருவான ஒரு வகை தொற்றாகும்.
இந்த தொற்று மிக விரைவாக பரவுகின்றன.
May 19 வரை, கனடாவில் 49.2 சதவீத COVID தொற்றுகள் இந்த விகாரங்களில் ஒன்றை உள்ளடக்கியுள்ளது.