Rafahவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து கனடிய பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.
பொதுமக்கள் மீதான இந்த தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் திகிலடைந்துள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.
Rafah மீதான தாக்குதல்களை கனடா எந்த விதத்திலும் ஆதரிக்கவில்லை என Justin Trudeau தெரிவித்தார்.
ஆனாலும் இந்த தாக்குதல் குறித்த கனடாவின் பதில் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை.
கடந்த October மாதம் நிகழ்ந்த Hamas தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை கனடா ஆதரித்தது.
ஆனாலும் Rafah நகரத்தில் தாக்குதலை தொடர வேண்டாம் என கனடா இஸ்ரேலை வலியுறுத்தியதாக Justin Trudeau கூறினார்.