Ontario சட்டமன்றத்தில் ஆங்கிலம், பிரஞ்சு தவிர வேறு மொழி அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் Sol Mamakwa செவ்வாய்க்கிழமை (28) தனது சொந்த மொழியில் உரையாற்றினார்.
Oji-Cree என ஆங்கிலத்தில் அறியப்படும் Anishininiimowin மொழியில், Ontario சட்டமன்றத்தில் புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த Sol Mamakwa உரையாற்றினார்.
இதன் மூலம் முதன்முறையாக, Ontario சட்டமன்றம் ஆங்கிலம், பிரஞ்சு தவிர வேறு ஒரு மொழியை அனுமதித்து வரலாறு படைத்தது.
தனது சொந்த மொழியில் பேசியதற்காக வதிவிடப் பாடசாலை தண்டிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர், முதற்குடியினர் மாகாண சபை உறுப்பினர் Sol Mamakwa மாகாண சபை கேள்வி நேரத்தில் Oji-Cree மொழியில் கேள்வி எழுப்பினார்.
தனது முன்னோர்களின் மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றுவது ஒரு “மகத்தான உணர்வு” என Sol Mamakwa கூறினார்.
கனடாவின் வதிவிடப் பாடசாலை அமைப்பின் விளைவாக மொழியை இழந்த முதற்குடியினர் சார்பாக தான் பேசுவதாக அவர் கூறினார்.