June மாதம் Franceசில் நடைபெறும் D-Dayயின் 80ஆவது ஆண்டு நிகழ்வில் கனடிய பிரதமர் கலந்து கொள்கிறார்.
D-Day நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக Justin Trudeau இரண்டு நாட்கள் France பயணமாகிறார்.
பிரதமர் அலுவலகம் இந்த பயணத்தை உறுதிப்படுத்தியது.
June 6ஆம் திகதி காலை Juno கடற்கரையில் நடைபெறும் கனடிய நிகழ்வில் பிரதமர் பங்கேற்பார்.
June 6ஆம் திகதி Beny-sur-Mer கனடிய போர் கல்லறையில் நினைவு நிகழ்விலும் பிரதமர் பங்கேற்க ஏற்பாடாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் முடிவின் ஆரம்பமாக D-Day கருதப்படுகிறது.