Mississauga நகர முதல்வர் தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமாகிறது.
இந்த இடைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் நான்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட, முன்னாள் நகர முதல்வரின் முன்னாள் கணவர் உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நகரசபை உறுப்பினர்களான Carolyn Parrish, Stephen Dasko, Alvin Tedjo, Dipika Damerla ஆகிய நகரசபை உறுப்பினர்கள் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தவிரவும் முன்னாள் நகர முதல்வரின் முன்னாள் கணவர் Brian Crombie இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நகர முதல்வருக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு June மாதம் 10ஆம் திகதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் முன்கூட்டிய வாக்குப்பதிவு May 24, 25 ஆம் திகதிகளில் Mississauga Civic Centreரில் நடைபெறுகிறது.
தொடர்ந்து முன்கூட்டிய வாக்குப்பதிவு June 1, 2 ஆம் திகதிகளில் Mississauga நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும்.
இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் Mississauga நகரின் ஏழாவது நகர முதல்வராக பதவி ஏற்பார்.
Mississauga நகரின் ஆறாவது நகர முதல்வராக Bonnie Crombie 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகள் சேவையாற்றினார்.
Ontario மாகாண Liberal கட்சி தலைவர் பதவியை வெற்றியடைந்த நிலையில் Mississauga நகர முதல்வர் பதவியில் இருந்து Bonnie Crombie விலகியிருந்தார்.
புதிய நகர முதல்வர் தெரிவாகும் வரை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, தொகுதி வாரியாக நகரசபை உறுப்பினர்கள் Mississauga நகர முதல்வர் பதவியில் செயலாற்றி வருகின்றனர்.