February 23, 2025
தேசியம்
செய்திகள்

Oshawa உணவகத்தின் முன்னாள் மேலாளரான தமிழர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக Oshawa  உணவகத்தின் முன்னாள் மேலாளரான தமிழர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

38 வயதான ஜெயராம் சிவஞானசுந்தரம் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Oshawa நகரை சேர்ந்த இவருக்கு எதிராக மூன்று பாலியல் வன்கொடுமைகள், இரண்டு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரண்டு முன்னாள் ஊழியர்கள் தங்கள் மேலாளர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து March 2024 இல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

One Eyed Jack’s என்ற உணவகத்தில் “ராம்” என அழைக்கப்படும் சந்தேக நபர் பணி புரிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் அந்த உணவகத்தில் தற்போது பணிபுரியவில்லை.

ஆனாலும் அவர் Toronto பெரும்பாகம், New Hamburg, Kitchener பகுதியில் உள்ள உணவகங்களில் பணியமர்த்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அவரது புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர் மேலும் பலர் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கவலை தெரிவித்துள்ளனர்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Liberal கட்சி வலுவாகவும் ஐக்கியமாகவும் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதியின் பொது சேவைக்கு Ontario முதல்வர் நன்றி

Lankathas Pathmanathan

Leave a Comment