கனடியப் பிரதமரின் தமிழின படுகொலை கூற்றை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கிறது.
தமிழின படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடியப் பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடிய நாடாளுமன்றம் May 18 ஆம் திகதியை தமிழின படுகொலை நினைவேந்தல் நாளாக ஒருமனதாக அங்கீகரித்ததை பிரதமர் இந்த அறிக்கையில் நினைவு கூர்ந்தார்.
ஆனாலும் இலங்கையில் தமிழின படுகொலை நிகழ்ந்தது என்ற Justin Trudeauவின் கூற்றை ஒரு பொய்யான குற்றச்சாட்டு என இலங்கை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மறுக்கிறது என இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
இலங்கை தொடர்பில் கனடிய பிரதமர் தொடர்ச்சியாக வெளியிட்ட அறிக்கைகள் கனடாவின் தேர்தல் வாக்கு வங்கி அரசியலின் விளைவு என இலங்கை வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டுகிறது.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என தவறாக குறிப்பிடும் Justin Trudeauவின் ஒப்புதல், இலங்கை வம்சாவளி கனடியர்களிடையே இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும் என அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.