வாகனத் திருட்டை எதிர்ப்பதற்கான தேசிய செயல் திட்டத்தை கனடிய அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
இந்தத் திட்டத்தில் திருடர்களுக்கு கடுமையான தண்டனைகள், காவல்துறை, அரசு அதிகாரிகள், எல்லை அமுலாக்கப் பிரிவினருக்கு இடையே தகவல் பகிர்வு அதிகரிப்பு ஆகியவை அடங்குகின்றன.
Ontario மாகாணத்தின் Brampton நகரில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பல அமைச்சரவை உறுப்பினர்கள் இந்த திட்டத்தை அறிவித்தனர்.
இந்தத் திட்டத்தில் முதன்மையாக வாகனத் திருட்டை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளும் அடங்குகின்றன.
2022 தொழில்துறை மதிப்பீடுகளின்படி, முந்தைய ஆண்டை விட பல மாகாணங்களில் வாகனத் திருட்டு விகிதங்கள் அதிகரித்துள்ளன.
Quebecகில், திருட்டுகள் 50 சதவீதம் அதிகரித்தன.
Ontarioவில் அவை 34.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
Toronto பெரும்பாக காவல்துறை சேவைகள் 104 சதவீத உயர்வை அறிவித்தன.