COVID தொற்று காலத்தில் Torontoவில் தலைமை மருத்துவராக செயல்பட்ட Dr. Eileen de Villa பதவி விலகுகிறார்.
செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒளிப்பட செய்தியில் அவர் தனது பதவி விலகலை அறிவித்தார்.
Torontoவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரியாக Dr. Eileen de Villa 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
கனடாவின் மிகப்பெரிய உள்ளூர் பொது சுகாதாரப் பிரிவை வழிநடத்த கிடைத்த சந்தர்ப்பத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
December 31 ஆம் திகதி அவர் தனது பணிகளை முடிக்கவுள்ளார்.