கனடாவில் 5 மாகாணங்கள், 1 பிரதேசத்தில் காற்றின் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு கனடா முழுவதும் காற்றின் தர எச்சரிக்கைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.
காட்டுத் தீ பருவம் ஆரம்பமாகும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியானது.
வடகிழக்கு British Colombia, மத்திய, வடக்கு Alberta, மத்திய Saskatchewan, Saskatchewanனுடன் Manitobaவின் எல்லை, வடக்கு Ontario, Northwest பிரதேசம் ஆகிய பகுதிகளில் இந்த எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
May 9 வரை, கனடா முழுவதும் சுமார் 90 காட்டுத் தீ எரிந்து வருகிறது.
இவற்றில் 40 தீ Albertaவில், British Columbiaவில் 24, Manitobaவில் 10 எரிகிறது.
Ontarioவில் இரண்டு, Quebecகில் ஒன்று என காட்டுத் தீ எரிந்து வருகிறது.
Atlantic கனடாவில் New Brunswick மாகாணத்தில் மாத்திரம் காட்டுத் தீ எரிந்து வருகிறது.
New Brunswick மாகாணத்தில் நான்கு தீ எரிந்து வருவதாக முறையிடப்படுகிறது.
May, June மாதத்திற்கான தீ முன்னறிவிப்பு British Columbiaவின் மேற்கு கடற்கரையைத் தவிர மேற்கு கனடா முழுவதும் அதிக அபாயத்தை காட்டுகிறது.
தெற்கு, மத்திய Saskatchewan, வடக்கு Albertaவின் சில பகுதிகள், British Columbiaவின் உள் பகுதிகளில் மிக அதிக தீ ஆபத்து உள்ளது.
Ontario, மேற்கு Quebecகின் பெரும்பாலான பகுதிகள் மிதமான ஆபத்தில் உள்ளன.
கிழக்கு Quebec, Atlantic கனடா ஆகிய பகுதிகள் குறைந்த அபாய நிலையில் உள்ளன.
May மாதத்தில் பெரும்பாலான Yukon, வடமேற்கு Northwest, தெற்கு Nunavut பிரதேசத்தின் ஒரு பகுதி தீ அபாயத்தில் உள்ளது.
June மாதத்தில், தீ ஆபத்து மிக அதிகமாகவும் தீவிரமாகவும் எதிர்வு கூறப்படுகிறது.