ISIS குடும்ப உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் சிரிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடியர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
வடகிழக்கு சிரியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து மொத்தம் 29 கனடியர்கள் விடுவிக்கப்பட்டு கனடாவிற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் சட்டத்தரணிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர்களின் விடுதலைக்காக வலியுறுத்த ஆரம்பித்தனர்.
2020 இல் கனடியர்களை மீள அழைத்து வரும் முயற்சிகள் ஆரம்பித்ததிலிருந்து, மொத்தம் 22 குழந்தைகள், ஏழு பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அண்மையில் Montreal நகரை சேர்ந்த பெண்ணின் ஆறு குழந்தைகள் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிரியா – துருக்கிய எல்லையில் குர்திஷ் அதிகாரிகளால் நடத்தப்படும் முகாம்களிலும் சிறைகளிலும் குறைந்தது 17 கனடியர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.