கனடா தனது நாட்டில் இருந்து குற்றவாளிகளை வரவேற்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார்.
சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கனடாவில் கொல்லப்பட்ட வழக்கில் 3 இந்தியர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த குற்றச்சாட்டு வெளியானது.
சீக்கிய பிரிவினைவாத விடயத்தில் இந்தியாவின் பெரும் தலையிடி என இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறினார்.
Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombia வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது மரணம் கனடாவில் உள்ள இந்திய தூதர்களுக்கு எதிராக போராட்டங்கள், பேரணிகளை தூண்டியது.
இந்த கொலையில் இந்திய அரசாங்கம் பங்கு வகித்தது என கனடிய பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டியதை அடுத்து இந்த எதிர்ப்புகள் குறிப்பிட்ட தீவிரத்தை அடைந்தன.