முதியவர்களை குறிவைக்கும் மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.
இவர்கள் வங்கி, credit card மோசடியில் முதியவர்களை குறி வைத்ததாக Durham பிராந்திய காவல்துறை குற்றம் சாட்டியது.
Ajax நகரை சேர்ந்த 27 வயதான லக்சாந்த் செல்வராஜா, 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் ஆகியோர் கைதானவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்
இவர்கள் இருவரும் 40 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
இவர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என கவலை தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்