தேசியம்
செய்திகள்

Pierre Poilievre சபையை விட்டு வெளியேற்றம்!

Conservative கட்சி தலைவர் Pierre Poilievre சபை அமர்வில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நாடாளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தை உபயோகம் காரணமாக சபாநாயகர் Greg Fergus, எதிர்க்கட்சி தலைவரை சபையில் இருந்து வெளியேற்றினார்.

செவ்வாய்க்கிழமை (30) கேள்வி நேரத்தின் போது Conservative தலைவர் சபை அமர்வில் இருந்து வெளியேற்றப்பட்டார்

பிரதமர் Justin Trudeau குறித்து தெரிவித்த வார்த்தைக்காக Pierre Poilievre சபையை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிரதமர் குறித்த வார்த்தையை மீளப்பெற Conservative கடசி தலைவருக்கு பல வாய்ப்புகளை சபாநாயகர் வழங்கியிருந்தார்.

Pierre Poilievre அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.

பிரதமர் Justin Trudeau “wacko” என Pierre Poilievre முதலில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வார்த்தையை மீளப்பெற சபாநாயகர் கோரியிருந்தார்.

அதற்கு பதிலளித்த Pierre Poilievre, இந்த வார்த்தையை “”radical” என மாற்றுவேன் என கூறினார்.

பின்னர் அந்த வார்த்தையை மீளப்பெற்று “extremist” என்ற வார்த்தையுடன் மாற்றுவேன் என Conservative கடசி தலைவர் தெரிவித்திருந்தார்

Pierre Poilievre சபாநாயகரின் அதிகாரத்தை புறக்கணிப்பதாக Greg Fergus கூறினார்.

சபாநாயகரின் அறிவுறுத்தல்களை புறக்கணித்ததற்காக Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Rachael Thomas சபையில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இந்த கருத்து பரிமாற்றம் ஆரம்பித்தது.

இந்த நிகழ்வுகளுக்கு முன்னர் தீவிர வலதுசாரி தீவிரவாதிகளுடன் Pierre Poilievre தொடர்பு வைத்திருப்பதாக Justin Trudeau குற்றம் சாட்டியிருந்தார்.

அவ்வாறு செய்பவர் பிரதமராக தகுதியற்றவர் என Pierre Poilievre குறித்து Justin Trudeau தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
\

Related posts

அமைச்சரவை மாற்றும் பிரதமர் Trudeau – தேர்தலுக்கு தயாராகின்றாரா?

Lankathas Pathmanathan

கனடிய இராணுவம் எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

NATO பாதுகாப்பு செலவின இலக்கை அடைய கோரும் பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Leave a Comment