December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய மக்கள் தொகையில் 11 சதவீதத்தினர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்!

வெளிநாடுகளில் வசிக்கும் கனடியர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டில் சுமார் நான்கு மில்லியன் என கூறப்படுகிறது.

இது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதத்திற்கும் அதிகம் என புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியான McGill Institute for the Study of Canada ஆய்வில் இந்த விபரம் வெளியானது.

இவ்வாறு வெளிநாடுகளில் வசிக்கும் கனடியர்களுக்கு எவ்வாறு ஆதரவை வழங்குவது என்பதற்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்க கனடிய அரசாங்கத்திடம் இந்த அறிக்கை கோருகிறது.

இந்த எண்ணிக்கை 1990 இல் இருந்து சுமார் 36 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.

கனடியர்கள் இடம்பெயர தேர்ந்தெடுக்கும் அதிகரிக்கும் ஒரு போக்கை இது குறிக்கிறது.

Related posts

ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

வேலை நிறுத்தம் முடிவடைந்தது – LCBO உறுதி!

Lankathas Pathmanathan

கனடிய இளையோர் hockey அணி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment