தேசியம்
செய்திகள்

சட்டமன்றத்தை விட்டு வெளியேற மாகாணசபை உறுப்பினரிடம் கோரிக்கை

மாகாணசபை உறுப்பினர் Sarah Jamaவை Ontario சட்டமன்றத்தை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டது.

Ontario சட்டமன்ற சபாநாயகர் Ted Arnott இந்த கோரிக்கையை வியாழக்கிழமை (25) முன்வைத்தார்.

கேள்வி நேரத்தின் போது சட்டமன்றத்தை விட்டு வெளியேறுமாறு சுயேச்சை மாகாண சபை உறுப்பினர் Sarah Jamaவைசபாநாயகர் கோரினார்.

Ontario சட்டமன்றத்தில் தடை செய்யப்பட்ட keffiyeh என்ற ஆடையை அணிந்ததற்காக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது

பாலஸ்தீனியர்கள், அரேபியர்கள், முஸ்லிம்கள் அணியும் இந்த ஆடைக்கு தடை விதிப்பதாக சபாநாயகர் கடந்த வாரம் அறிவித்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் மத்தியில் இந்த ஆடை ஒரு அரசியல் சின்னமாக மாறிவிட்டது என Ted Arnott கூறினார்.

ஆனாலும் சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தை விட்டு வெளியேற Sarah Jama மறுத்துவிட்டார்.

முதல்வர் Doug Ford உட்பட Ontario மாகாணத்தின் நான்கு அரசியல் கட்சித் தலைவர்கள்,  இந்த தடையை மீளப் பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னாள் புதிய ஜனநாயக கட்சியின் மாகாண சபை உறுப்பினரான Sarah Jama கடந்த October மாதம் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்த பற்றிய அவரது கருத்துக்கள் Ontario சட்டமன்றத்தால் தணிக்கை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலஸ்தீனர்களுக்கு உதவ மேலதிகமாக $50 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த கனடா!

Lankathas Pathmanathan

Manitobaவின் அடுத்த முதல்வராக Kelvin Goertzen பதவியேற்கிறார் !

Gaya Raja

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைகிறது

Leave a Comment