December 12, 2024
தேசியம்
செய்திகள்

பசுமைக் கட்சியின் துணைத் தலைவருக்கு சிறை தண்டனை!

பசுமைக் கட்சியின் துணைத் தலைவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் Angela Davidsonக்கு 60 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Vancouver தீவில் மரங்களை அகற்றும் Fairy Creek போராட்டங்களில் பங்கு வகித்ததற்கு அவருக்கு புதன்கிழமை (24) இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்றத் தடை உத்தரவையும், பின்னர் அவரது ஜாமீன் நிபந்தனைகளையும் மீறியதற்காக ஏழு குற்றவியல் அவமதிப்பு வழக்குகளில் January மாதம் Angela Davidson தண்டிக்கப்பட்டார்.

நீதிமன்ற தடை உத்தரவை மீறியதற்காக அவர் முதலில் May 2021 இல் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மேலும் ஆறு முறைகள் அவர் கைது செய்யப்பட்டார்.

Angela Davidson ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 நாட்களுக்கு மேலதிகமாக 48 நாட்கள் சிறையில் இருப்பார்.

மேலும் 75 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் அவருக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Angela Davidsonனுக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னர் பசுமைக் கட்சியின் துணைத் தலைவராக February மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்த சிறைத்தண்டனையை பசுமைக் கட்சி மறுத்துள்ளது.

Angela Davidsonனுக்கு பசுமைக் கட்சியின் ஆதரவை தலைவர் Elizabeth May வெளிப்படுத்தினார்.

பெருநிறுவன இலாபங்களை பாதுகாக்க நீதிமன்ற தடைகள் பயன்படுத்தப்படுகின்றன என Elizabeth May கூறினார்.

Fairy Creek போராட்டத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

Bell ஊடக வலைய பணி நீக்கங்கள் குறித்து பிரதமர் அதிருப்தி

Lankathas Pathmanathan

தெருவிழாவில் பங்கேற்காமல் ஒற்றுமையான செய்தியை வெளிப்படுத்துவோம்: கூட்டு அழைப்பு

Lankathas Pathmanathan

பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று!

Gaya Raja

Leave a Comment