தேசியம்
செய்திகள்

Ontario மாகாண நெடுஞ்சாலைகள் சிலவற்றின் வேகக் கட்டுப்பாடு விரைவில் அதிகரிப்பு!

401, 403  நெடுந்தெருக்களின் சில பிரிவுகளில் இந்த ஆண்டு வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்படவுள்ளது.

Ontario மாகாண நெடுஞ்சாலைகள் சிலவற்றின் வேகக் கட்டுப்பாட்டை விரைவில் அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் கோடை காலம் முதல் இந்த அதிகரிப்பு அமுலில் வரும் என புதன்கிழமை வெளியான அறிக்கையில் மாகாணம் உறுதிப்படுத்தியது.

Ontarioவின் தெற்கு, வடக்குப் பகுதிகளில் உள்ள மாகாண நெடுஞ்சாலைகளின் 10 கூடுதல் பிரிவுகளில் வேகக் கட்டுப்பாடு 100 km/hஇல் இருந்து 110 km/h ஆக உயர்த்தப்படும்.

Toronto பெரும்பாகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் இந்த வேகக் கட்டுப்பாடு அதிகரிப்பு நடைமுறைக்கு வரவில்லை.

Woodstock முதல் வரையிலான நெடுஞ்சாலை 403யின் 26 கிலோ மீட்டர் இந்த வேக அதிகரிப்புக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை 401 இல் நெடுஞ்சாலை 35/115 இலிருந்து Cobourg வரையிலான 35 கிலோ மீட்டர் பாதையிலும் வேகம் அதிகரிக்கப்படும்.

Related posts

விடுமுறை காலத்தில் ஆயிரக்கணக்கான  பருவகால ஊழியர்களை பணியமர்த்தும் கனடா Post – Purolator !

Gaya Raja

COVID அதிகரிப்பு குறித்து கண்காணிக்கும் சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

முதற்குடியினர் குழந்தை நல மேல்முறையீடுகளை நீதிமன்றம் தள்ளுபடி! 

Gaya Raja

Leave a Comment