மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க “அனைத்து தரப்பினருக்கும்” கனடா அழைப்பு விடுத்துள்ளது.
வியாழக்கிழமை இரவில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து கனடா இந்த அழைப்பை விடுத்துள்ளது.
எனது G7 சகாக்களுடன் இணைந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மேலும் அதிகரிப்பதை தடுக்க அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறேன் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly வெள்ளிக்கிழமை கூறினார்.
கனடா உட்பட G7 வெளியுறவு அமைச்சர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி வெள்ளியன்று இந்த விடயத்தில் ஒரு பொது அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த அறிக்கை April 13 அன்று நிகழ்ந்த ஈரானின் தாக்குதலையும் கண்டித்தது.