மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களை தணிக்க இஸ்ரேலை வலியுறுத்துவதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலை ஈரான் மீது மேற்கொள்ள வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்
ஈரான் மீது நேரடித் தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சரிடன் கூறியதாக Mélanie Joly தெரிவித்தார்.
ஈரான் மீதான மேலதிக தடைகள் குறித்து இந்த வாரம் G7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள வெளியுறவு அமைச்சர்களுடன் விவாதிக்கவுள்ளதாக Mélanie Joly கூறினார்
சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது April 1ம் திகதி நிகழ்ந்த வான்வழித் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.
இந்த தாக்குதலில் மூத்த இராணுவ அதிகாரிகள் பலியாகினர்.