December 12, 2024
தேசியம்
செய்திகள்

முன்னாள் Thunder Bay காவல்துறைத் தலைவர் கைது

முன்னாள் Thunder Bay காவல்துறைத் தலைவர் கைது செய்யப்பட்டு தவறான நடத்தை விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டார்.

முன்னாள் Thunder Bay காவல்துறைத் தலைவர் கைது செய்யப்பட்டு, தவறான நடத்தை குறித்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police – OPP) வெள்ளிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டனர் .

Ottawaவைச் சேர்ந்த 57 வயதான Sylvie Hauth என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவருக்கு எதிராக மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகளை OPP பதிவு செய்துள்ளது.

Sylvie Hauth பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் May  7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Thunder Bay காவல்துறைக்குள் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதான OPP விசாரணையில் இது மூன்றாவது கைது நடவடிக்கையாகும்.

Related posts

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போராட்டம் தொடர்கிறது

Lankathas Pathmanathan

சீன அரசிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் Hydro-Quebec ஊழியர் கைது

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளான Albertaவின் தொற்று நிலை!

Gaya Raja

Leave a Comment