Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் நிகழ்ந்தது.
Toronto மேற்கு பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரியும் சந்தேக நபரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரி உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.
காவல்துறையினரால் சுடப்பட்டவரின் நிலை குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் காவல்துறை கண்காணிப்பு குழுவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணைகளை முன்னெடுக்க உள்ளது.