December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec மதச்சார்பின்மை சட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை

Quebecகின் மதச்சார்பின்மை சட்டத்தின் அரசியலமைப்பு குறித்த விவாதம் கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளது.

Quebec மாகாண மதச்சார்பின்மை சட்டத்தின் மீதான மேல் முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை Montreal பாடசாலை வாரியம் கோரியுள்ளது.

பிரேரணை 21 மீது  தீர்ப்பளிக்க கனடாவின் உச்ச நீதிமன்றத்தை  கோருவதற்கு ஆதரவாக Montreal ஆங்கில பாடசாலை வாரியம் (English Montreal School Board – EMSB) புதன்கிழமை வாக்களித்தது.

புதன்கிழமை (10) நடைபெற்ற பாடசாலை வாரிய சிறப்பு கூட்டத்தின் போது இந்த மேல் முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை கோரும் பிரேரணைக்கு ஆதரவாக 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஏற்கனவே February 29ஆம் திகதி  Quebec மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த சட்டத்தை உறுதிப்படுத்தியது.

Related posts

கனடாவின் இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியானது

Lankathas Pathmanathan

Ontario-Quebec எல்லையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

இரண்டு பிரதான கட்சி தலைவர்கள் தோல்வி!

Gaya Raja

Leave a Comment