வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
மத்திய வங்கி கடந்த July முதல் தொடர்ந்து ஆறாவது முறையாக அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து சதவீதத்தில் வைத்துள்ளது.
பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது
ஆனாலும் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் சரியான திசையில் நகர்கிறது என கூறும் மத்திய வங்கி, வட்டி விகித குறைப்புக்கு முன்னர், பணவீக்கம் குறைவதற்கான அறி குறிகளை ஆராய்வதாக தெரிவித்தது.
June மாதத்தில் வட்டி விகித குறைப்புக்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன என மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem கூறினார்.